தேடல்

Wednesday 28 December 2011

அர்த்தமுள்ள காதல்

பதினாறு வயதின்
பருவ முறுக்கில்,
படையெடுத்த தேடல்...

காதலின் முதல் உதயம் !
காணும் அழகியெல்லாம்,
காதலியாய்...

'பொறுக்கி' எடுக்கையில்
அழகான பெண்
இவள் தான்..

துக்கத்துடன்
தூக்கம் கெட்டு - புது
திட்டத்துடன், அவள் முன்னே..
தயார் நிலையில் ராணுவமாய்...

அரை குறையாய்,
காதலை சொல்லித் திரும்பி பார்க்க,
வயது இருபது.!


மாணவன் எனும்
மதிப்பை இழந்து, மாதங்கள்
சில சென்ற போது..
என்னவள் முகம்
என்னை கடந்து,
எண்ணங்கள் முழு மதியாய்...

காதலின் நினைப்பில்,
காலம் நகர்த்தும்
கதாநாயகனாய் நான் !
ஓ... காதலே !
நீ என்ன இனிப்பான விஷமா?
காளையாய் எழுந்தவனை
கோழையாக்கி விட்டாயே...

காலங்கள்
கடந்த போது,
கை பிடித்தால் - காதலி
அவள் முறை மாப்பிள்ளையோடு...

 ஐயகோ...
வருடங்களாய் - இதயத்தில்
வாழ்ந்து வந்த காதலி
வேலி தாண்டிய போது
வயது இருபத்தைந்து...

வாழ வேண்டிய வயதில்,
வாழ்க்கை சூன்யமாய்...
 
பெண் தேடுவதை
பெற்றவர்கள் கையில் கொடு..
படிக்கும் வயதில்
காதலிப்பதை விடு...
மண முடித்த பின் - காதலி
மனைவியை ..
காதல் அர்த்தமுள்ளதாகும் !

2 comments:

  1. கவிதை சிற்பியின் கைகளில் எத்தனை அர்த்தமுள்ள விடியல்கள்....வாழ்த்துக்கள் நண்பரே...
    இவண்... 7-ப்பு வாத்தியார் சரவணன்...

    ReplyDelete